
இளவாலை பங்கின் ஒரு அங்கமாக இருந்து தற்போது ஒரு புதிய பங்காக மாற்றப்பட்ட புனித யாகப்பர் ஆலய பங்கின் புதிய பங்குத்தந்தையாக நியமனம் பெற்ற அருட்திரு ஜெயக்குமார் அவர்கள் இன்று வியாழக்கிழமை பணிப் பெறுப்பை ஏற்றுக்கொண்டார்.
வியாழக்கிழமை மாலை நடைபெற்ற திருப்பலியில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்களின் முன்னிலையில் இவர் தனது பணியை ஏற்றுக்கொண்டார்.
இளவாலை புனித யாகப்பர் ஆலய பங்கில், இளவாலை புனித றீற்றன்னை ஆலயம், பத்தாவத்தை புனித பிலிப்புநேரியார் ஆலயம், வலித்துண்டல் புனித அன்னாள் ஆலயம், மயிலங்கூடல் புனித வேளாங்கன்னி ஆலயம் அத்துடன் சேந்தாங்குளம் புனித அந்தோனியார் ஆலயம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
புதிய பங்கின் பங்குத் தந்தையாக பணிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அருட்திரு ஜெயக்குமார் அவர்களே இளவாலை மறைக்கோட்ட முதல்வராகவும் நியமனம் பெற்றுள்ளார். இந்நிகழ்வுகள் இளவாலை பங்குத்தந்தையும் முன்நாள் இளவாலை மறைக்கோட்ட முதல்வருமாகிய அருட்திரு யேசுரட்ணம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Source: New feed