நாம் ஆற்றும் இரக்கச் செயல்களில், கடவுள் தம்மையே வெளிப்படுத்துகிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 15, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
“நாம் ஆற்றும் அனைத்து இரக்கப்பணிகளில், நம் ஒவ்வொரு பிறரன்புப்பணியில், கடவுள் தம்மையே வெளிப்படுத்துகிறார், கடவுள் தம் பார்வையை உலகின் மீது பதிக்கிறார்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளியன்று இடம்பெற்றிருந்தன.
மேலும், திருப்பீடத்திற்கு, பிரித்தானியா நாட்டுத் தூதராகப் பணியாற்றும் Sally Jane Axworthy அவர்களும், திருப்பீடத்திற்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தூதராகப் பணியாற்றிய Callista L. Gingrich அவர்களும், இவ்வெள்ளியன்று, வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினர்.
வத்திக்கான் அருங்காட்சியகம் பிப்ரவரியில் திறப்பு
இன்னும், கோவிட்-19 விதிமுறைகளுக்கு உட்பட்டு, வருகிற பிப்ரவரி மாதம் முதல் தேதியிலிருந்து, வத்திக்கான் அருங்காட்சியகத்தை, பொது மக்களுக்கு, மீண்டும் திறப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக, வத்திக்கான் அருங்காட்சியகத்தின் இயக்குனர் Barbara Jatta அவர்கள் அறிவித்துள்ளார்.
இத்தாலிய அரசு அதிகாரிகளின் வழிகாட்டுதல்களின்படி, திருப்பீடத்தின் நிர்வாகிகள் அமைப்பு மேற்கொண்ட தீர்மானத்தின் அடிப்படையில், வத்திக்கான் அருங்காட்சியகத்தை, மீண்டும் திறப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக, Jatta அவர்கள் கூறியுள்ளார்.
Source: New feed