பிலிப்பீன்ஸ் நாட்டை Goni புயல் கடுமையாய்த் தாக்கிய ஒரு வாரத்திற்குள், அந்நாட்டை மீண்டும் தாக்கியுள்ள Vamco புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அந்நாட்டுத் தலத்திருஅவை, இடர்துடைப்பு உதவிகளை அனுப்பியுள்ளது.
நவம்பர் 11, இப்புதன் இரவில் பிலிப்பீன்ஸ் நாட்டைக் கடுமையாய்த் தாக்கியுள்ள Vamco புயலால், குறைந்தது 42 பேர் இறந்துள்ளனர் மற்றும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் மனிலாவில், இப்புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை ஆற்றிவரும் வின்சென்ட் தெ பவுல் சபையின் அருள்பணி Dani Pilario அவர்கள் கூறுகையில், பாலங்களுக்கு அடியில், சேரிகளில், சட்டத்திற்குப் புறம்பே வாழ்ந்துவரும் மக்களுக்கு, உடனடி உதவிகள் வழங்கப்பட்டன என்று, யூக்கா செய்தியிடம் கூறியுள்ளார்.
Vamco புயலில் பெய்த கனமழையால், மனிலாவின் Marikina பகுதியுள்ள ஓர் ஆறு, மூன்று மணி நேரத்திற்குள்ளாக, ஒரு மீட்டர் அளவு உயர்ந்தது என்றும், இந்த வெள்ளப்பெருக்கால், மிகவும் நலிந்த மக்களே அதிகம் பாதிப்படைந்துள்ளனர் என்றும், அருள்பணி Pilario அவர்கள் கூறினார்.
Source: New feed