அனைவரும் உடன்பிறந்தோர்’ என்ற தன் அண்மைய திருமடல் குறித்து, அக்டோபர் 26, இத்திங்களன்று டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மகிழ்ச்சியாக இருப்பதற்கு, மற்றவர்களுக்கும் இருக்கும் உரிமையை மறந்து செயல்படத்தூண்டும் சீற்றம் நிறைந்த நடவடிக்கைகளிலிருந்தும், மற்றவர்கள் குறித்து எண்ணுவதை தடுக்கும் நம் பதற்றங்களிலிருந்தும், மனித குலத்தைப் பாதிக்கும் கொடிய நிலைகளிலிருந்தும், இரக்கம் நம்மை விடுவிக்கின்றது என, திருத்தந்தை இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
மேலும், இஞ்ஞாயிறன்று, இரண்டு டுவிட்டர் செய்திகளை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் டுவிட்டரில், ‘அடுத்தவர் மீதான அன்பில் வெளிப்படுத்தப்படாத எதுவும், இறைவன் மீதான உண்மை அன்பாக இருக்கமுடியாது என்பதுபோல், கடவுள் மீதான அன்பில் வெளிப்படுத்தப்படாதது, அடுத்தவர் மீதான உண்மை அன்பாக இருக்கமுடியாது’ என அதில் தெரிவித்துள்ளார்.
இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து தன் முதல் டுவிட்டரை இவ்வாறு வெளியிட்ட திருத்தந்தை, தன் இரண்டாவது டுவிட்டரில், நைஜீரியா நாட்டில் வன்முறைகள் முடிவுக்கு வந்து, அமைதி நிலவ செபிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை விடுத்துள்ளார்.
Source: New feed