ஆண்டவர் இயேசுவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே .
ஆண்டவர் இயேசுவின் தாயும் மனுக்குலத்தின் தாயுமான நமதன்னையின் விண்ணேற்படைந்த திரு நிகழ்வு விவிலியத்தில் திருத்தூதர்களால் எழுதபடவில்லை என்றாலும் திருவெளிப்பாடு நூலில் ஆண்டவர் இயேசுவால் யோவானுக்கு காட்சி மூலம் சொல்லப்பட்டது .
முதல் நூற்றாண்டு முதலே ஆதி கிறிஸ்தவர்கள் மரியன்னை விண்ணகத்தில் இருக்கிறார் என்ற செவி வழி நற்செய்தி இன்றளவும் பிரிவினைவாதிகள் தவிர அனைத்து கிறிஸ்தவர்களாலும் ஏற்று கொள்ளப்பட்டது .
பழைய ஏற்பாடு புத்தகத்தில் சொல்லபட்ட மறையுண்மைகளும் அவை புதிய ஏற்பாட்டில் நிகழ்ந்தவைகளும் .
மரியன்னை புதிய உடன் படிக்கையின் பேழை .
திருப்பாடல்கள் – திபா 132 6 திருப்பேழை எப்ராத்தாவில் ( பெத்லகேம் )இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்; வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம்.
திருப்பாடல்கள் – திபா 132 7 “அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்! வாருங்கள்; அவரது திருவடிதாங்கி முன் வீழ்ந்து பணிவோம்!” என்றோம்.
திருப்பாடல்கள் – திபா 132 8 ஆண்டவரே! நீர் உமது வல்லமை
விளங்கும் பேழையுடன் (அன்னையுடன்)உமது
(விண்ணகத்திற்கு)
உறைவிடத்திற்கு எழுந்தருள்வீராக
இங்கு
சொல்லபட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறியது
பழைய ஏற்பாட்டில் தேடிய உடன் படிக்கை பேழை புதிய ஏற்பாட்டில் விண்ணகத்தில் ஒரு பெண்ணாக காணப்படுகிறார்
திருவெளிப்பாடு –
திவெ 11 19 அப்பொழுது விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும் நிலநடுக்கமும் கனத்த கல்மழையும் உண்டாயின.
திருவெளிப்பாடு – திவெ 12 1 5.
வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்.
மரியன்னை புதிய உடன்படிக்கை பேழைதான் என்பன குறித்து விவிலிய ஒப்பீடுகள் உள்ளன அவற்றுள் சில .
பழைய #உடன்படிக்கை பேழை ஆலயத்திற்கு வந்தபோது வந்த விண்ணிலிருந்து வந்த நெருப்பு
2 குறிப்பேடு – 2 குறி 5 7 அவ்வாறே குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைக் கோவிலின் கருவறையாகிய திருத்தூயகத்திற்குக் கொண்டு வந்து, அதற்குரிய இடமாகிய கெருபுகளின் இறக்கைகளுக்குக் கீழே வைத்தனர்.
2 குறிப்பேடு – 2 குறி 7 1 திருக்கோவிலின் அர்ப்பணம்
(1 அர 8:62 – 66)
சாலமோன் தம் மன்றாட்டை முடித்ததும், வானத்திலிருந்து #நெருப்பு இறங்கி, எரி பலியையும் மற்றப் பலிகளையும் எரித்தது.
புதிய ஏற்பாடு நிகழ்வில் மரியன்னை இருந்த இடத்தில வந்த நெருப்பு நாவு
திருத்தூதர் பணிகள் – திப 1 14 அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும்(புதிய உடன்படிக்கை பேழை ) இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.
திருத்தூதர் பணிகள் – திப 2 3 மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள்.
பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டு திரு நிகழ்வுகள் ஒன்றை ஒன்று சார்ந்தவை
எசாயா – எசா 34 16 ஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்கள்; ‘எதுவுமே தனித்துவிடப்படுவதில்லை, துணையின்றி எதுவும் இருப்பதில்லை’ ஏனெனில், ஆண்டவரின் வாய் மொழிந்த கட்டளை இது. அவரது ஆவிதான் இவற்றை ஒருங்கிணைத்தது.
விண்ணகம் சென்ற மரியன்னையாகிய புதிய உடன்படிக்கை பேழை இறைமகன் வாழ்ந்த முதற்பேறான ஆலயம் உலகம் முழுவதும் காட்சிகளிலும் தோன்றி தனது மகனின் இறையாட்சியை உலகம் முழுவதும் உலகம் முடியும் வரை கொண்டு செல்லும் .
பூமியில் தனது மகன் தன்னிடம் சிலைவையடியில் ஒப்படைத்த மக்களை அரவணைத்து தனது மகனிடம் அழைத்து செல்லும் இறை பணியை செய்வார்.
தமது #கத்தோலிக்க ஆலயங்கள் அனைத்தும் ஆண்டவர் இயேசுவின் விண்ணக அரசின் மண்ணக வீடான ஆண்டவர் இயேசுவால் உருவாக்கபட்ட கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடமான புனித பேதுரு சதுக்கத்தோடு இணைக்கபட்டவை .
மரியன்னையாலும் திருத்தூதர்களாலும் மறைசாட்சிகளாலும் உருவாக்கபட்டவை .
கத்தோலிக்க அன்பர்களே தனிமனிதன் தனது சுய லாபத்திற்காக உருவாக்கும் பிரிவினைவாதிகளின் செபகூட்டங்களுக்கு ஏன் செல்லவேண்டும் ???
அற்புதம் பொங்கி வழியும் நமது கத்தோலிக்க ஆலயங்கள் செல்வோம் நல்ல பாவசங்கீர்தனம் செய்து திவ்ய நற்கருணை உட்கொள்ளுங்கள்
நமது உடலை தூய ஆவியானவர் தங்கும் ஆலயமாக மாற்றுவோம்
கத்தோலிக்க ஆலயம் செல்லுங்கள் அற்புதங்களை அள்ள செல்லுங்கள் கிறிஸ்தவ வாழ்வு என்பது போராட்டமான வாழ்வு போராடி வெற்றி கொள்வோம் ஜெபமாலை செய்வோம்
Source: New feed