அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் 17 வயது பெண்கள் பிரிவில் பாசையூர் புனித அந்தோனியார் றோமன் கத்தோலிக்க மகளிர் வித்தியாலயம் ஒரு தங்கப் பதக்கம், இரு வெள்ளிப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கங்கள் உட்பட 4 பதக்கங்களை கைப்பற்றி இரண்டாம் இடத்தை பெற்றனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகள் அண்மையில் பொலநறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
பெண்களிற்கான பளுதூக்கல் போட்டியில் பாசையூர் புனித அந்தோனியார் மகளிர் வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த மாணவர்களான ஜெ.சுகனினா 20 வயதிற்குட்பட்ட 81 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் 130 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும், 17 வயதிற்குட்பட்ட பிரிவில் ஏ.விஜிதா 40 கிலோ நிறைப் பிரிவில் 83 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும், ஜெ.ஸ்ரெல்லா 55 கிலோ நிறைப் பிரிவில் 83 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும், அதே எடைப் பிரிவில் டி.டிலக்சியா வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.
Source: New feed