இயற்கைவழி இயக்கத்தின் மாலைநேர உழவர் சந்தையாகிய “இயற்கைவழி அங்காடி” இன்று வியாழக்கிழமை 05/09/2019 ஆனைக்கோட்டையில் (ஆனைக்கோட்டை சந்தியில் இருந்து மானிப்பாய் செல்லும் வழியில் 100 மீற்றர் தூரத்தில்) மாலை 3.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற விவசாய போதனாசிரியரும் இயற்கை வழி இயக்கத்தின் ஆலோசகர்களில் ஒருவருமாகிய சிவநேசன் ஐயா அங்காடியை ஆரம்பித்து வைத்தார்.
முன்னதாக இடம்பெற்ற கலந்துரையாடலில்
இயற்கை வழி செயற்பாட்டாளர் வைத்திய கலாநிதி பிரபு இவ்வாறான இயற்கை வழி அங்காடிகள் தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு பிரதேசங்களிலும் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஒவ்வொரு பிரதேசங்களிலும் உள்ள இயற்கை வழி செயற்பாட்டாளர்கள் அங்காடி உருவாக்கத்துக்கு முன்வர வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
அல்லை விவசாயி கிரிசனின் சுவையான இலைக்கஞ்சியும் தித்திக்கும் கற்றாழைப்பானமும் பரிமாறப்பட்டது.
இறுதியாக வெளிவந்த
இரு இயற்கை வழி இதழ்களும் நிகழ்வில்
வந்திருந்தவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இச் சந்தையானது ஒவ்வொரு வாரமும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பி.ப 2 மணிமுதல் 5 மணிவரை இயங்கும்.
இங்கு இயற்கைவழியில் உற்பத்திசெய்யப்பட்ட காய்கறிகளை மட்டுமல்லாது இயற்கைவழி வேளாண்மைக்கு அவசியமான இடுபொருட்கள், பாரம்பரிய விதைகள், ஊட்டக் கரைசல்கள் எனச் சகல உள்ளீடுகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
Source: New feed