எமது நாட்டில் நடாத்தப்பட்ட சில வன்முறைச்சம்பவங்களால் அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பின் பொருட்டு, பாடசாலை பாதுகாப்புச்சபையினால் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இவை எதிர்வரும் திங்கள்கிழமையிலிருந்து (2019.05.06) நடைமுறைப்படுத்தப்படும் அதேவேளை மறுஅறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும். மாணவர்கள், பெற்றோர்கள் இவற்றிற்கு ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தப்படுகின்றனர்
01. பாடசாலை வாயிலில் சகல மாணவர்களினதும் புத்தப்பைகள் ஆசிரியர்களால் சோதிக்கப்படும். ஆகவே பாடசாலைக்கு வரும் போது அநாவசியமான, சந்தேகத்திற்கு இடமான மேலதிகமான பொருட்கள் எதனையும் கொண்டு வர வேண்டாம்.
02. பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தும் கழுத்துப்பட்டி, சின்னம் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அணியாதவர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
03. உயர்தர மாணவர்கள் தேசிய அடையாள அட்டையை கண்டிப்பாக பாடசாலைக்கு கொண்டுவருதல் வேண்டும்.
04. பாடசாலையின் சகல வாயில்களும் சரியாக 7.30 மணிக்கு மூடப்படும், அதன்பின் எந்த மாணவர்களும், ஆசிரியர்களும் உட்செல்லவும், வெளிச்செல்லவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மீண்டும் 1.30 மணிக்கே வாயில்கள் திறக்கப்படும்.
05. பெற்றோர், பாதுகாவலர், உறவினர்கள் யாரும் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
06. 7.30 மணிக்கு பின்னர் பாடசாலைக்குள் நுழைய விரும்பும் பெற்றோர் வாசலில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் குறித்த தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டு அனுமதி பெற்றபின்னரே வாயில் திறக்கப்படும். அப்போதும் எவ்வித பயணப்பொதிகளுடனும் யாரும் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
07. பெற்றோர் கூட்டங்களுக்கு அழைக்கப்படும் பெற்றோர் குறித்த நேரத்திற்குள் வருகை தர வேண்டும். பின்னர் வாயில் கதவு திறக்கப்பட மாட்டாது. அப்போதும் எவ்வித பயண பொதிகளும் யாருடனும் அனுமதிக்கப்படாது.
08. ஆரம்பபிரிவு மாணவர்களை அழைத்துச்செல்லும் பெற்றோர் , தாமதங்களை தவிர்த்து உரிய நேரத்திற்கு அழைத்துச்செல்லவும்
09. பாடசாலையினுள் சந்தேகத்திற்கு இடமான பொருட்களையோ நபர்களையோ கண்டால் உரிய ஆசிரியர்களிடம் அறியத்தருவது மாணவர்களின் கடமையாகும்.
10. மறு அறிவித்தல் வரை, பாடசாலையில் நடைபெறும் மேலதிக வகுப்புக்கள், விளையாட்டு பயிற்சிகள் போன்றவை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
11. பாடசாலை நிறைவடைந்தாலும் மாலை நேர விளையாட்டுக்களில் பாடசாலை மைதானத்தினுள் விளையாடுவது ,நுழைவது அனைவருக்கும் மறுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு பாடசாலை நிர்வாகம் அனைவரையும் கோருகின்றது.
Source: New feed