மாந்தை புனித லுர்த்து அன்னை ஆலயத்திற்கு முன்பாக 3.03.2019. அன்று நடைபெற்ற இரண்டு மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளுக்கான விசாரனை நாளைய தினம் மன்னார் காவல் துறை அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
மன்னார் நீதி மன்றத்தினால் வழக்கு விசாரனை எதிர்வரும் 29.03.2019அன்று எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் ஆரம்ப கட்ட விசாரனையாக நாளைய தினம் மன்னார் காவல் துறைஅதிகாரிகளினால் நடாத்தப்படவுள்ளது
எனவே நாளைய தினம் நடைபெறவுள்ள ஆரம்பக்கட்ட விசாரனைகள் மிகவும் சுமுகமாக முடியவும், உண்மை எதுவோ அதற்கு சான்று பகரவும், எமது கத்தோலிக்க இறைமக்கள் சார்பாக விசாரனைக்கு செல்லவுள்ள அனைத்து இறைமக்களுக்கும் அன்னை மரியாளின் பரிந்துரைகள் நிறைவாய் கிடைக்கப்பெற இவர்களுக்காக விசேட விதமாக ஞாயிறு திருப்பலி வேளையில் இறைவேண்டுதல் செய்யும் படியாக அன்போடு கேட்டுக்கொள்ளுகின்றோம்
Source: New feed