ஓ! பரிசுத்த செபமாலையின் இராக்கினியே! பாத்திமாவின் மதுரமுள்ள தாயே! போர்த்துகல் தேசத்தில் தோன்ற இரக்கம் கொண்டு, ஒரு காலத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த தேசத்தின் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சமாதானத்தை அடைந்து தந்தவளே, எங்கள் பிரிய நாட்டின் மேல் கிருபைக் கண் கொண்டு பார்த்தருளும். பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் அதனை உமது வல்லமையால் உயர்த்தி ஞானத்திலும் உறுதியான ஒழுக்கத்திலும் அதை மீண்டும் ஸ்தாபிக்கும்படி உம்மை இரந்து மன்றாடுகிறோம். சமாதானத்தைத் திரும்பக் கொண்டு வாரும்; அன்றியும் பூமியிலுள்ள சகல மனிதர்களுக்கும் சமாதானத்தைக் கொடுத்தருளும்; அதனால் எல்லா தேசத்தவர்களும், முக்கியமாய் எங்களுக்குச் சொந்தமானவர்கள் தேவரீரைத் தங்கள் இராக்கினியாகவும் சமாதானத்தின் இராக்கினியாகவும் வாழ்த்தி ஆனந்திக்கக் கடவார்கள். சமாதானத்தின் இராக்கினியே மனுக்குலத்துக்கு நிலையான சமாதானத்தை அடைந்து தந்தருளும்
Source: New feed