யாழ் மரியாயின் சேனையின் பாதுகாவலரும் வழிகாட்டியுமான மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் வாழ்த்து செய்தி.
இவ்வாண்டு “அழைத்தல் ஆண்டாக ” எம் மறை மாவட்டத்தில் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது .குறிப்பாக பொதுநிலையினர் தங்கள் அழைத்தல் பற்றி சிந்தித்து செயல்பட அழைக்கப்படுகிறார்கள். மரியாயின் சேனையாரே நீங்கள் பொதுநிலையினரின் அழைத்தலுக்கு சிறந்த ஒர் அடையாளம். மரியாயின் வழி உங்கள் வாழ்வும் செயல்பாடுகளும் அதனை கோடிட்டுக் காட்டுகின்றன. புதிய ஆண்டில் சேனையாராகிய நீங்கள் அதற்கு வலுசேர்க்க மரியாயின் வழிசென்று இறையரசுக்கnக அர்பணத்துடன் செயல்பட இறையாசிர் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கிறேன்
Source: New feed