கத்தோலிக்கம் சிலை வழிபாடு செய்கிறதா?
கத்தோலிக்கர்கள் சிலைகளை வணங்கவில்லை. கத்தோலிக்க தேவாலயங்களில் இருப்பது சிலை அல்ல சொரூபம்தான் .
சொரூபம் என்றால் கற்பனை தெய்வங்கள் அல்ல.சொருபங்கள் இயேசு,மாதா,புனிதர்களை நினைவுபடுத்துகிற சின்னங்கள்.
படிப்பறிவு இல்லாதவர்களுக்கு சொரூபங்களே வசனம்.
எடுத்துக்காட்டாக நாம் காலையில் செய்திதாளில் எத்தனையோ பேர் பலி என்று வாசிக்கிறோம். ஆனால், அதை நினைத்து நாம் வருத்தப்படவில்லை. அதே விபத்தை நாம் நேரில் பார்த்தால் நாம் அதை நினைத்து கொண்டே இருப்போம். அதுபோல நாம் இயேசுவை, மாதாவை, புனிதர்களை, இயேசுவின் பாடுகளை நேரில் பார்க்க முடியாது. அதனாலே அதை எடுத்துக்காட்டும் வகையில் கத்தோலிக்க தேவாலயங்களில் சொரூபங்கள் இடம் பெற்றுள்ளன. அதனால், கத்தோலிக்கர்கள் பத்து கட்டளையை மீறுவது இல்லை.
பொதுவாக பிரிவினை நண்பர்கள் கத்தோலிக்கம் விவிலியத்தை மீறுகிறது என்று மேற்கோள் காட்டுவது இந்த வசனத்தை தான்
விடுதலைபயணம் 20:4 மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.
5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.
இதில் நன்றாக கவனியுங்கள் இவை அனைத்தும் கற்பனையான ஒரு சிலையை குறிக்கும் அதாவது விளங்குங்கள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்களை கடவுள் என்று வழிபட கூடாது. ஆனால் கத்தோலிக்கமோ மனிதாக பிறந்த கடவுளுக்கு தான் சுருபம் வைத்திருக்கிறோம் அது மட்டுமல்ல திருச்சபை அவைகளுக்கு வழிபாடு செய்வதில்லை மாறாக அவைகளை நினைவேந்தலுக்கு தான் வைத்திருக்கிறது என்பதை மீண்டும் நினைவு கூறுகிறோம்.
2. சொருபங்கள் மண்ணால் செய்யப்பட்டவைதானே, முத்தமிடலாமா?
உங்கள் அருமையான தாயின்,தந்தையின் படத்தை முத்தம் செய்வது அந்த அட்டையின் மேல் உள்ள அன்பினாலா? இல்லை. உங்கள் தாய், தந்தை மீது உள்ள அன்பு தான் அதற்கு காரணம். அதுபோல இயேசுவை, மாதாவை,புனிதர்களை நினைத்து அவர்களது நினைவு சின்னமான சொருபத்தை முத்தம் செய்கிறவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.
சுருபங்களை தொட்டு வணங்குவது என்பது ஒரு நம்பிக்கை தான் அதற்க்கு ஒரு எடுத்து காட்டு இதோ
லூக்கா8:43 பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் தம் சொத்து முழுவதையும் மருத்துவரிடம் செலவழித்தும் எவராலும் அவரைக் குணமாக்க இயலவில்லை.
44 அப்பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். உடனே அவரது இரத்தப்போக்கு நின்று போயிற்று
48 இயேசு அவரிடம், “மகளே உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ” என்றார்.
இது போன்றே ஆண்டவரின் மீது முழு நம்பிக்கையுடன் குணமாக்குவார் என்று நினைத்தாள் ஆண்டவரின் துணையுடன் அனைத்து பிணிகளும் நீங்கும் அல்லவா? கண்டிப்பாக நம் நம்பிக்கையின் பொருட்டு ஆண்டவரால் நீங்கும். சிந்தியுங்கள்
Source: New feed