யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கிறிஸ்தவ நாகரிகத்துறை யாழ். திருமறைக்கலாமன்றத்தின் அனுசரணையுடன் ஒழுங்கமைக்கும் புதியதோர் கிறிஸ்தவ மனிதநேயப் பண்பாட்டை நோக்கி கிறிஸ்தவ கற்கைகள் பற்றிய பன்னாட்டு மாநாடானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்; டிசெம்பர் 7ஆம் 8ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது யாழ் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை தலைவர் கலாநிதி ஜே.சி. போல் றோகான் அடிகளார் இந்த புதியதோர் கிறிஸ்தவ மனிதநேயப் பண்பாட்டை நோக்கி கிறிஸ்தவ கற்கைகள் பற்றிய பன்னாட்டு மாநாடு பற்றி உதயன் பத்திரிகையின் விசேட இணைப்பான சூரியகாந்தியின் கிறீஸ்தவ ஞாயிறு பகுதிக்கு தெரிவிக்கும் போது இந்த ஆய்வு மாநாடானது இன்றைய உலகைத் தீராது ஆட்டிப்படைக்கும் பல பிரச்சினைகளுடன், ஏழ்மை, அநீதி, ஊழல், பூகோளமயமாதலின் தீய விளைவுகள், கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சூழல் சார் சவால்கள் உள்ளடங்கலான பிரச்சினைகளின் மத்தியிலும், ஒரு புதிய மனிதநேயப் பண்பாடு ஒன்றைக் கட்டியெழுப்பும் தமது மானுட மற்றும் சமூகப் பொறுப்புக்களைக் கிறிஸ்தவர்கள் மேலும் வினைத்திறனுடன் நிறைவேற்றுவதற்கான வழி வகைகளை முன்மொழிவதையும், அவர்கள் தங்கள் உள்@ர் சூழலில் மானுடவிழுமியங்களை அடித்தளமாக கொண்ட புதிய பண்பாடு ஒன்றைக் கட்டியெழுப்ப மேற்கொண்டுவரும் முயற்சிகளை விஞ்ஞான பூர்வமான அறிவியல்முறைசார் ஆய்வுகளினூடாக ஆவணப்படுத்துவதற்கான தளம் ஒன்றை வழங்குவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய மனிதநேயப் பண்பாட்டுக்கான பங்களிப்பை வழங்குவது இங்கு கிறிஸ்தவர்களின் ஒரு சமூகப் பொறுப்புணர்வின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. இவ்வாய்வரங்கானது ஏனைய சமய நம்பிக்கையாளர்களையும் ஒன்றிணைத்து அனைவராலும் பகிரப்படும் மானுட விழுமியங்களை அடித்தளமாகக் கொண்ட ஒரு சிறந்த சமுதாயத்திற்காக குரல் கொடுப்பது மற்றும் உழைப்பது தொடர்பான விழிப்புணர்வையும் அதிகரிக்கும். மேலும் இவ்வாய்வரங்கு கிறிஸ்தவர்களும், ஏனைய சமய நம்பிக்கையாளர்களும் தமக்குப் பொதுவாக உள்ள சமூகப் பொறுப்பு சார்ந்த விடயங்களில் எவ்வாறு ஒன்றிணைந்து ஈடுபட்டு ஒரு புதிய மனிதநேயப் பண்பாட்டை உருவாக்க முடியும் என்பதற்கான வழிவகைகளையும் ஆராயும் என்றார்.
Source: New feed