பிறப்பு : தெரியவில்லை இறப்பு : ஆகஸ்ட் 8, 1570 முக்திபேறு பட்டம் : கி.பி. 1886 அருளாளர் ஜான் ஃபெல்டன் பின்னணியைப் பற்றி அறியப்பட்ட கிட்டத்தட்ட அனைத்தும், அவருடைய மகள் “ஃபிரான்செஸ் சேலிஸ்பரி” (Frances Salisbury) என்பவரின் கதைகளில் இருந்து வருகிறது. அவரது கதையை வைத்திருக்கும் கையெழுத்துப் பிரதியில், அவருடைய வயது இருக்க வேண்டிய இடம் காலியாக இருக்கிறது. ஆனால் இவர், இங்கிலாந்து (England) நாட்டின் “கிழக்கு ஆங்கிலியா” (East Anglia) மாகாணத்தின் வசதி படைத்த “நோர்ஃபோல்க்” (Norfolk Ancestry) வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், மத்திய லண்டனின் (Central London) “சவுத்வார்க்” (Southwark) மாவட்டத்திலுள்ள ஆங்கிலேய பெனடிக்டின் (English Benedictine monastery) துறவுமடமான “பெர்மான்ட்சே” (Bermondsey Abbey) மடத்தில் வசித்தவர் என்றும் அறிய முடிகிறது. குள்ளமான உயரம் கொண்ட, ஆகிருதியான, கருமை நிற மேனி வண்ணம் கொண்ட ஜான் ஃபெல்டனுடைய மனைவி, இங்கிலாந்து அரசி (Queen of England), முதலாம் எலிசபெத்தின் (Elizabeth I) சிறு வயது விளையாட்டுத் தோழியும், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளின் அரசியான (Queen of England and Ireland) “மேரியின்” (Mary) மரியாதைக்குரிய பணிப்பெண்ணும் (Maid-of-Honour), அரசி மேரியின் தணிக்கையாளர்களில் (திருத்தந்தையர் நீதிமன்ற ஒரு சட்ட அதிகாரி) ஒருவரது விதவையும் ஆவார். நன்கு அறியப்பட்ட கத்தோலிக்கராக இருந்த ஜான் ஃபெல்டன், “அருளாளர் தாமஸ் ஃபெல்டன்” (Blessed Thomas Felton) என்பவரது தந்தையுமாவார். திருத்தந்தை ஐந்தாம் பயஸ் (Pope Pius V), கி.பி. 1570ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 25ம் நாள், இங்கிலாந்து அரசி (Queen of England), முதலாம் எலிசபெத்துக்கு (Elizabeth I) எதிராக, (Regnans in Excelsis) எனப்படும் ஒரு சுற்றறிக்கையினை வெளியிட்டிருந்தார். அந்த சுற்றறிக்கையின் நகல் ஒன்றினை வைத்திருந்த மற்றும் திருத்திய குற்றங்களுக்காக ஜான் ஃபெல்டன் கைது செய்யப்பட்டார். அரசி முதலாம் எலிசபெத்துக்கு எதிரான இவ்வறிக்கையினை வைத்திருத்தல் அல்லது பிரசுரித்தல் ஆகியன, மிகவும் தீவிரமான ராஜதுரோக குற்றமாக கருதப்பட்டது. 1570ம் ஆண்டு, மே மாதம், 24ம் தேதி, இரவு 11 மணியளவில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக சட்ட பதிவுகள் கூறுகின்றன. ஆனால், கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் விழா தினமான மறுநாள் அதிகாலை இரண்டிலிருந்து மூன்று மணிக்குள் நடந்ததாக “சாலிஸ்பரி” (Salisbury) பதிவுகள் கூறுகின்றன. திருத்தந்தையின் அறிக்கை நகலை பெற்ற ஜான் ஃபெல்டன், அதன் நகல் ஒன்றினை தமது நண்பரான “வில்லியம் மெல்லோஸ்” (William Mellowes of Lincoln’s Inn) என்பவருக்கு கொடுத்தார். லண்டன் நகரினுள்ளும், மற்றும் அருகிலுள்ள சுற்றுப்புற கத்தோலிக்க இல்லங்களிலும் ஒரு பொதுத் தேடல் நடத்தப்பட்டு, விரைவில் கண்டுபிடிக்கப்பட்டது. மே மாதம், 26ம் தேதி கைது செய்யப்பட்ட “வில்லியம் மெல்லோஸ்”, குற்ற நடவடிக்கையில் ஜான் ஃபெல்டனுக்கும் சம்பந்தம் உள்ளதாக கூறினார். தமது இராஜதுரோக செய்கையை உடனடியாக ஒப்புக்கொண்ட ஜான் ஃபெல்டன், தமது செய்கையை மகிமைப்படுத்தினார். மற்றும், எலிசபெத், இங்கிலாந்தின் அரசியாக இருக்க தகுதியற்றவர் என்று பிரகடனம் செய்தார். ஆகஸ்ட் மாதம், 4ம் நாளன்றும், தண்டனை அறிவிக்கப்பட்ட ஜான் ஃபெல்டன், லண்டனில் (London) உள்ள “செயின்ட் பவுல்” (St. Paul’s Churchyard) ஆலய வளாகத்தில், நான்கு நாட்கள் கழித்து தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்னர், ஒருமுறை அல்லது இரண்டு முறை இயேசுவின் புனிதப் பெயரைச் சொன்னதாக அவருடைய மகள் கூறினார். திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII), கி.பி. 1886ம் ஆண்டு, இவருக்கு முக்திபேறு பட்டமளித்தார்.
Related Posts
கிறிஸ்து பிறப்பு வியப்படைவதற்குரிய ஒரு சிறப்புத் தருணம்!
December 21, 2024
திருத்தந்தை, ஜோ பிடனுடன் தொலைபேசியில் உரையாடினார்
December 21, 2024
கிறிஸ்து பிறப்பு விழாவிற்கான திருப்பலிகள்
December 21, 2024