மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“நீங்கள் கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நாம் உலக காரியங்களைவிட அதிகமாக ஆன்மீக காரியங்களில் நாட்டம் கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“நாளைக்காகக் கவலைப் படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும்.” என இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
நம் வாழ்வின் அனைத்து துன்பங்களையும் ஆண்டவர் அறிவார். அனைத்தையும் அவர் பார்த்துக் கொள்வார் என்று விசுவாசத்தோடு கவலையின்றி நாம் நமது பணிகளை செய்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
கிறிஸ்தவ சீர்திருத்த இயக்கத்தை (Protestant Reformation) கடுமையாக எதிர்த்ததால் மறைசாட்சியாகக் கொல்லப்பட்ட இன்றைய புனிதர் புனித தாமஸ் மூர் மனைவியை இழந்தோரின் பாதுகாவலராவார்.
பலவிதமான சிரமங்கள் மத்தியில் தங்களது வாழ்க்கை நகர்த்தும் மனைவியை இழந்தோருக்காக இந்த புனிதர் வழியாக வேண்டுவோம். அவர்களுக்காக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
நாளை ஞாயிறு திருப்பலியில் முழுமையாகப் பங்கேற்று ஆண்டவரின் திருவுடலை வாங்க தகுதிபெற நம்மையே நாம், முன் தயாரித்துக் கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.