இந்திய இலங்கை நாட்டைச் சார்ந்த புனித யோசவ்வாஸ் கன்னியர் சபையைச் சார்ந்த 12 அருட்சகோரிகள் தங்கள் துறவற வாழ்வின் நித்திய வாக்குத்தத்தங்களை மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு இம்மானுவேல்
பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் இவ் சபையின் தலைவி அருட்செல்வி.மேரி டாலர் ஆகியோர் முன்னிலையில் வழங்கும் புனித வைபவம் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தில் முப்
படைகளின் பலத்த பாதுகாப்புடன் ஞாயிற்றுக் கிழமை (12.05.2019) காலை 6.30 மணிக்கு நடைபெற்ற இவ் நிகழ்வில்
யாழ் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்சகோதரி மேரி அன்சியா தனது முதல் வார்த்தைபாட்டையும், ஐந்து ஆண்டுகளாக இறைவனுக்கு ஏற்புடையவர்களாக சபையிலே வாழ்ந்த தமிழ் நாட்டிலுள்ள கும்பக்கோணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்சகோதரி சகாய மேரி, கோட்டாறு மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்சகோதரி பெல்லா, கோட்டாறு மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்சகோதரி கிறிஸ்டல் ஜேகா, சென்னை மயிலாப்பூர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்சகோதரி விமலா தூய மேரி, கும்பக்கோணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்சகோதரி அன்னமேரி, தஞ்சாவூர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்சகோதரி அமலி, மதுரை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்சகோதரி சலேத்தம்மாள் சசிகலா, வட இந்தியாவிலுள்ள நாசிக் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்சகோதரி லீனா, பெர்கம்புர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்சகோதரி கனித்தா சிங், வைறதராபுரத் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்சகோதரி லூசி மேரி, இலங்கை நாட்டிலுள்ள கண்டி மறைமாவட்டத்தைச்
சேர்ந்த அருட்சகோதரி. ஜேயமலர், மற்றும் இதே மறைமாவட்டத்தைச் சார்ந்த அருட்சகோதரி சூசான் ஆகியோரே தங்கள் துறவற வாக்குத்தத்தங்களை வழங்கி ஆசீர்வதிக்கப்பட்ட மோதிரங்கள் அணிவிக்கப்பட்டன.
பேசாலை பங்குத் தந்தை அருட்பணி தேவராஜா கொடுத்தோர் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் யாழ் மறைமாவட்டத்தைச் சேர்ந்த யாழ் பல்கழக விரிவுரையாளருமான அருட்பணி ரவீந்திரன், இந்தியா திருச்சி மறைமாவட்டத்தின் பரிசுத்த ஆவி சபையைச் சார்ந்த அருட்பணி டேவிற், அருட்பணி டேவீன் கூஞ்ஞ, மன்னார் கலையருவி இயக்குனரும் மன்னா பத்திரிகை ஆசிரியருமான அருட்பணி அ.லக்ஸன் டீ சில்வா ஆகியோர் இணைந்து இவ் விழா நிகழ்வு திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.
Source: New feed