தாயகத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கையின் சீற்றத்தினால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி கிராமத்தைச் சேர்ந்த 130 குடும்பங்களிற்கு அன்புகரங்களின் ஊடாக சுவிசில் வசிக்கும் ஜெராட்டின் நிதி உதவியில் மீள் வாழ்வளிக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு செயற்பாடாக ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்களும் ஒரு தொகுதி உடைகளும் அக் கிராமத்தினை சேர்ந்த 130 குடும்பங்களிற்கு எமது உறுப்பினர்கள் மூலம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இவ் செயற்பாட்டினை சிறப்பாக செய்த எம் அமைப்பின் உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு அவர்களது பயணம் தொடர வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றேன். இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு இயன்ற உதவிகளை வழங்குவதை இட்டு மகிழ்வடைகின்றேன். மேலும் இவ் அனர்த்தத்தில் இருந்து அவர்கள் விரைவாக மீண்டு வர இறைவனிடம் வேண்டுகின்றேன்.
நன்றி.
Source: New feed