வீரமங்கைகள் விளைந்த ஊரு
வீசிய முத்தில் முளைத்த விருட்சம்
தேவி அக்கா
(செல்வி பிராசிஸ்பிள்ளை சந்திரலேகா)
அக்கா என்று அழைக்கும் போது
அன்பு கொண்டு அள்ளிக் கொள்வாள் !!
சும்மா ஒருநாளும் இருந்தது இல்லை
பெண் விடுதலை உடைத்த புத்திரி!!
சுமை தாங்கும் கல்லாய் இருந்து
தியாகச் சுடர் நாடகத்தி கதை,இயக்கம்,நடனம் இவள்!!
இம்மை பிறப்பை இயங்க வைத்து
எழுபதுகளில் மகளீர் மன்றம் நடாத்திய புதுமைப் பெண்!!
அண்ணாவியர் தந்தைக்கு அருவமும் உருவமும் கொண்டவள்!!
உன்னதமான ஞாயிறு நாடகம் மேடை ஏற்றி ஊரில் உண்மை உரைத்தவள்!!
இன்னல் தாங்கி மேன்மை எம் ஊரைச் சுமந்தவள் !!
இயன்றவரை இசை பாட்டுக்கு சளையாள் மேடைகளில் என்பதுகளில்!!
தம்மை தரணியில் தாழ்த்திக் கொண்டு
எம் ஊரை ஏற்றிய ஏணி இவள்!!
இவள் குரல் இலங்கை வாணொலியில்
தவழ்ந்த நாட்கள் பல!!
பட்டிமன்றம் பல கண்ட பாரதியின்
புதுமைப் பெண்!’
இந்த வீர மங்கை விளைந்த நம் ஊர்!
வீறு நடை போட்ட வீதிகள்!
தீர மங்கை ஔவை கொண்டு!
தீர்வு கண்ட ஆனையூர் !
சீரம் கொண்டு வாழும் அடைக்கல அன்னை ஆலயத்திற்கு இவளும் ஒரு மன்மகுடம்!
நீரகம் சூழ்ந்த இப்புவியில் பெண்கள்
இல்லாமல் ஏது சக்தி மண் தரையில்!!
வாழ்துகள் அக்காச்சி
தமிழ் புரவலன் ஆனையூரான்
Source: New feed