குருமட அதிபர் அருட்பணி. பாஸ்கரன் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. முற்பகல் 11.00 மணிக்கு திருநாள் திருப்பலி யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேனாட் ஞானபிரகாசம் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மாட்டீனார் குருமட கொடியேற்றல் நிகழ்வும் குருமடத்தின் யூபிலி ஆண்டை ஆரம்பிக்கும் நினைவு சின்ன திரை நீக்கமும் இடம்பெற்றன. மாலை விளையாட்டு நிகழ்வுகள் குருமட மைதானத்தில் நடைபெற்றன.
150 ஆண்டுகளை நோக்கி வரலாற்று தடம்பதிக்கும் யாழ்ப்பாணம் புனித மாட்டீனார் சிறிய குருமடம் யாழ் மறைமாவட்டத்தில் கடந்த 149 ஆண்டுகளாக குருக்களை வழங்கும் ஆரம்ப குருத்துவ உருவாக்கலின் தொட்டிலாகத் திகழ்ந்து வருகின்றது. புனித மாட்டீனார் சிறிய குருமடம் 2019ஆம் ஆண்டு தன் 150 ஆண்டு (1869 – 2019) நிறைவை எதிர் நோக்கியுள்ளது.
Source: New feed