முஸ்லிம் சமுதாயத்தோடு உறவுகளை வலுப்படுத்தல்: உரையாடல், புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளுதல்” என்ற தலைப்பில், நியு யார்க் ஐ.நா. தலைமையகத்தில், இஸ்லாம் ஒத்துழைப்பு அமைப்பு மே 2, இவ்வியாழனன்று நடத்திய கூட்டத்தில் உரையாற்றினார், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா.
ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் அவுசா அவர்கள், முஸ்லிம் சமுதாயத்தோடு உரையாடல், புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளுதலை ஊக்குவிக்கும் நோக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2017ம் ஆண்டு ஏப்ரல் 28,29 ஆகிய நாள்களில் எகிப்து சென்றதைக் குறிப்பிட்டார்.
2019ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி முதல், 5ம் தேதி வரை, ஐக்கிய அரபு அமீரகம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, தன் கதவுகளைத் திறந்து விட்டதையும், அராபிய தீபகற்பத்திற்கு திருத்தந்தை ஒருவர், திருத்தூதுப்பயணம் மேற்கொண்டது இதுவே முதல்முறை என்பதையும் சுட்டிக்காட்டிப் பேசினார், பேராயர் அவுசா.
2019ம் ஆண்டு, மார்ச் 30,31 ஆகிய தேதிகளில் திருத்தந்தை மொராக்கோ நாடு சென்றது பற்றியும் உரையாற்றிய பேராயர் அவுசா அவர்கள், அபுதாபியில், கடந்த பிப்ரவரி 4ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், முஸ்லிம் பெரிய குரு அகமது அல் தாயிப் அவர்களும், கையெழுத்திட்டு வெளியிட்ட, உலக அமைதிக்காக மனித உடன்பிறப்புநிலை என்ற அறிக்கை பற்றியும், தன் கருத்துக்களை எடுத்துச்சொன்னார்
Source: New feed