அன்னை மரியாவின் காட்சிகள் குறித்து மிகைப்படுத்திப் பேசப்படும்வேளை, கத்தோலிக்க திருஅவை, அக்காட்சிகளைப் பொருத்தவரை, எப்போதும் விவேகத்துடன் செயல்படுகின்றது என்று, இத்தாலிய ஆயர்கள் பேரவையின் TV 2000 தொலைகாட்சி தொடர் நிகழ்ச்சியில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அருள்மிகப்பெற்ற மரியே வாழ்க எனப்படும், அன்னை மரியாவை நோக்கிய செபம் குறித்த சிந்தனைகளை, TV 2000 தொலைகாட்சியில், கடந்த எட்டு வாரங்களாக, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் நிகழ்ச்சியில், இவ்வாறு கூறினார்.
ஆண்டவரை எனது உள்ளம் போற்றி பெருமைப்படுத்துகின்றது என்ற மரியின் பாடல், அன்னை மரியாவின் காட்சிகள், முஸ்லிம்களின் அன்னை மரியா பக்தி ஆகிய தலைப்புகளில், தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ள திருத்தந்தை, நம் கிறிஸ்தவ விசுவாசம், நற்செய்தியிலும், திருவெளிப்பாடுகளிலும், திருவெளிப்பாடுகளின் மரபுகளிலும் வேரூன்றப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
மரியா அப்படி இருந்தார், மரியா இயேசுவைச் சுட்டிக்காட்டுகிறார்.. இவ்வாறு காட்சி காண்பவர்கள் அல்லது, அக்காட்சிகளை அறிவிப்பவர்கள் சொல்லும்போது, அவர்கள் மரியின் இதயத்திற்கு ஒத்தவகையில் செயல்படுவதில்லை என்றார், திருத்தந்தை.
முஸ்லிம்கள், அன்னை மரியா மீது கொண்டிருக்கும் பக்தி பற்றி பேசிய திருத்தந்தை, முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் நல்லிணக்கத்துடன் வாழ்கின்ற ஓர் ஆப்ரிக்க நாட்டில், யூபிலி ஆண்டில், பெருமளவான முஸ்லிம்கள், பேராலயத்திற்குச் சென்று அன்னை மரியா திருவுருவத்திடம் செபித்தனர் என, அந்நாட்டு ஆயர் ஒருவர் தன்னிடம் பகிர்ந்துகொண்டதைக் குறிப்பிட்டார்
Source: New feed