இயேசுக்கிறிஸ்துவின் பாடுகள் மரணம் உயிர்ப்பு போன்ற பாஸ்கா மறைபொருளை கொண்டாடுவதற்காக ஆயத்தம் செய்கின்ற 40 நாட்களை கொண்ட தவக்காலத்தின் முதலாம் நாளாகிய இன்று, முல்லைத்தீவு மறைக்கோட்டத்தை சேர்ந்த கத்தோலிக்க குருக்களும் துறவிகளும் கேப்பாபிலவு மண்மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் இணைந்து தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
தவக்காலத்தில் நோன்பிருந்து பிறரன்பு செயல்களில் ஈடுபட வேண்டுமென கத்தோலிக்க திருச்சபை எம்மை பணிக்கின்றது. மற்றவரிற்காக எம்மை அர்பணித்து வாழ அழைக்கப்பட்ட இத் தவக்காலத்தில் அனைவருக்கும் முன்மாதிரிகையாக செயற்பட்ட கத்தோலிக்க குருக்கள் துறவிகளின் செயற்பாடு நிச்சயமாக பாராட்டுக்குரியது
Source: New feed