மறையாசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சி 2021
2021 தை மாதம் 25ம் திகதி தொடக்கம் இம்மாதம் (மாசி) 06ம் திகதி வரை கிளிநொச்சி முல்லைதீவு மறைக்கோட பங்குகளில் பணியாற்றிவரும் மறையாசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சி யாழ். மறைக்கல்வி நிலையத்தில் மறைமாவட்ட கல்வி, மறைக்கல்வி, திருவிவிலிய ஆணைக்குழு இயக்குநர் அருட்திரு ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமாகிய இவ்வதிவிட பயிற்சியில் திருவிவிலியம், திருவழிபாடு. அருள் அடையாளங்கள், புனித மரியாள், புனிதர்கள் வணக்கம், வத்திக்கான் சங்க ஏடு அறிமுகம், திருஅவை சுற்றுமடல்கள், மறைக்கல்வி போதனாமுறை, ஆசிரிய ஆன்மீகம், மறை ஆசிரியர்களுக்கான ஊடகப்பயன்பாடு ஆகிய கற்கை நெறிகளுடன் தலைமைத்துவப் பயிற்சிகளும் வழங்கப்படடன. அத்துடன் பல்வேறு பங்குத்தளங்களில் இருந்து வருகை தந்திருந்த இப்பயிற்சியாளர்கள் ஒருவர் ஒருவரை அறிந்துகொள்வதற்கும். தம்மிடையே உறவை வளர்த்துக்கொள்வதற்கும் செயலமர்வுகள். குழுச்செயற்பாடுகள், நாடகப்பயிற்சி, தியானமுறைகள் ஆகியனவும் இடம்பெற்றன.
இவ்வாண்டு யாழ். மறைமாவட்டத்தில் அன்பிய ஆண்டாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில் நம்பிக்கை வாழ்வை புதுப்பிக்கவும் ஆன்மீக வாழ்வை ஆழப்படுத்தவும் அன்பியம் தொடர்பான விளக்கங்களை அருட்பணியாளர்கள் மில்பர்வாஸ், லியோ ஆம்ஸ்ரோங் ஆகியோர் இப்பயிற்சியாளர்களுக்க வழங்கினார்கள். மேலும் வழிபாடுகளுக்கு ஆயத்தம் செய்தல், திருப்பலிக்கான முன்னுரை மன்றாட்டு எழுதுதல், திருவிவிலிய செப வழிபாடு தியானம், ஆகிய செயற்பாடுகளுக்கும் பயிற்றுவிக்கப்படடன .
திருவழிபாட்டில் திரு இசையின் முக்கியத்துவத்தை விளக்கி பாடல் பயிற்சியம் வழங்கப்பட்டது.
ஒருநாள் களப்பயணமாக சின்னமடு, சாட்டி யாத்தரைத் தலத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பயிற்சியின் இறுதிநாளாகிய 06.02.2021 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு மறைக்கல்வி நிலைய கேட்ப்போர் கூடத்தில் காலை நிகழ்வுகளுடன் இடம்பெற்றது. யாழ். மறைமாவடட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.
Source: New feed