யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தின் பருத்தித்துறை மறைக்கோட்ட புலோப்பளைப் பங்கில் முகமாலை எனுமிடத்தில் எழுந்தருளியிருக்கின்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதாவின் ஆலயப்பெருவிழா கடந்த 20.09.2019 அன்று மாலை 4.30 மணிக்கு பங்குத்தந்தை வண. செபஸ்ரியன் அடிகளாரால் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நவநாள் திருப்பலியை அருட்தந்தை யூட் அமலதாஸ் அடிகளார் ஒப்புக்கொடுத்தார். 21.09.2019 நேற்றைய நாளில் நற்கருணைவிழாவில் திருப்பலி, நற்கருணை எழுந்தேற்றம் நற்கருணைப்பவனி, நற்கருணை ஆசீர்வாதம் இடம்பெற்றது. கிளிநொச்சிப்பங்கின் உதவிப்பங்குத்தந்தை வண. அனற்கிளின் அடிகளார் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். அன்னையின் பெருவிழா 22.09.2019 இனறு காலை 6.00 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி திருப்பலி, திருச்சொருப பவனி, திருச்சொருப ஆசீர்வாதம் ஆகியவற்றுடன் நிறைவு பெற்றது. பெருவிழா திருப்பலி கிளிநொச்சி பங்குத்தந்தையும் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வருமான அருட்தந்தை வண. யேசுதாசன் அடிகளாரால் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயமானது கடந்தகால போர்ச்சூழலில் முற்றாக அழிவுற்ற நிலையில் இப்பொழுது மீண்டும் அதே இடத்தில் கட்டியெழுப்பப்படுவது போல் அன்னைமரியின் ஆசிரால் அனைவரினதும் விசுவாசமும் கட்டியெழுப்படுவது புதுமை. இப்பெருவிழாவில் பல்வேறு இடங்களிலுமுள்ள அன்னையின் பக்தர்கள் வருகை தந்து ஆசீரைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது
Source: New feed