நாம் இவ்வுலகில் காட்டும் பிறரன்பு எத்தனை முக்கியத்துவம் நிறைந்தது என்பதை வலியுறுத்தும்வண்ணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி இச்செவ்வாயன்று வெளியானது.
இறுதி தீர்ப்பு நாளின்போது, நாம் நம் கருத்துக்களுக்காகவோ, கொள்கைகளுக்காகவோ தீர்ப்பிடப்படமாட்டோம், மாறாக, நாம் மற்றவர்களுக்கு காட்டிய கருணையின் அடிப்படையில் தீர்ப்பிடப்படுவோம், என தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதற்கிடையே, புர்கினோ ஃபாசோ நாட்டு தலைநகர் Ouagadougouல் Soleterre பிறரன்பு அமைப்பு ஒன்று, புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தங்கள் பெற்றோர் ஒருவருடன் தங்கி சிகிச்சை பெற உதவும் வகையில் மருத்துவ இல்லம் ஒன்றை திறந்துள்ளது.
GFAOP எனப்படும், பிரெஞ்சு மொழி பேசும் ஆப்ரிக்க நாடுகள் இணைந்த, குழந்தைகள் புற்றுநோய் கழகத்தின் உதவியுடன் Soleterre அமைப்பு உருவாக்கியுள்ள இந்த இல்லத்தில், ஒரு தாயும் ஒரு குழந்தையும் என, ஒரே நேரத்தில், 12 குடும்பங்கள் தங்கி சிகிச்சை பெறமுடியும்.
ஏற்கனவே புர்கினோ ஃபாசோ தலைநகரில், குழந்தைகளுக்கு சேவையாற்றிவரும் இரு மருத்துவமனைகளின் பணிச்சுமையை குறைத்து, அதிக குழந்தைகளுக்கு பணியாற்றும் நோக்கத்தில் இந்த புதிய இல்லம் திறக்கப்பட்டுள்ளது
Source: New feed