கிருபாகரியே! மஹேஷ்வரியே! ஈஸ்வரியே! ஆதி பிதா, ஆதி சர்பத்தை சபிக்கும் பொழுது அதன் தலையை நசுக்கி உடைக்க அவரில் உதித்த தாய் மரியே!
சூரியனை ஆடையாகவும் சந்திரனை பாதத் தாமரையாகவும், செவ்வாய் புதன் தன் வசம் கொண்டு வியாழன் என்ற குரு தெய்வ அம்சொருபியாகவும், சனி என்ற நாளை தனதாக்கி, ராகு கேது என்ற அலகையை குதிங்காலில் மிதித்தவளாகவும், பன்னிருகுலக் கோத்திரத்திற்கு அரசியாகவும் தாயாகவும், பார் புகழ் பன்னிரு நட்சத்திரத்தை பார் முடியாகச் சூடி பன்னிரு இருக்கைகளான ராசிகளை தன் இடம், வலம் அமர்க்கைகளாக கொண்டு இவ்வளவையும் படைத்து சர்வலோகத்தையும் அரசாளும் இறைவனை ஈன்றெடுத்த கையில் அமர்த்தியவளாகவும், அவர் தந்த தாய் மரியே!
உமது பிள்ளைகளாகிய எங்களுக்கு நடந்த, நடக்கின்ற, வருகின்ற பாவ சாபதோஷங்கள், கிரக நட்சத்திரங்களின் தோஷங்கள், பில்லி சூனியங்கள் எரித்து பிணி அகற்றி அருள் புரிவாயாய் அம்மா!
9 பர…
9 பிரி…
9 திரி…
அமல உற்பவியே! தாயே! ஆமென்.
(குறிப்பு: பர – பரலோகத்திலிருக்கின்ற, பிரி – பிரியதத்தத்தினாலே, திரி – திரித்துவ செபம்)
Source: New feed