சுயநலத்தைத் தாண்டியதாய், எவ்விதக் கட்டுப்பாடுகளும் அற்றதாய் இருப்பதே உண்மை அன்பு என்ற கருத்தை மையமாக வைத்து, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
“உங்களுக்கு வசதிப்படும் காலம்வரை மட்டுமே அன்பு கூர்பவர்களாக நீங்கள் இருக்க முடியாது. ஒருவரின் சுயநலத் தேவைகளைத் தாண்டியதாகவும், எவ்விதக் கட்டுப்பாடுகளும் அற்றதாகவும் இருக்கும்போதுதான், அன்பு வெளிப்படுத்தப்படுகின்றது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றுள்ளன.
மேலும், இரஷ்ய கலைகளின் திருப்பயணம் என்ற தலைப்பில், வத்திக்கான் அருங்காட்சியகம், மற்றும், இரஷ்ய கலாச்சார அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் இச்செவ்வாய்க்கிழமை முதல், வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி வரை, வத்திக்கானில் இலவசக் கண்காட்சி ஒன்று நடத்தப்படுகிறது.
ஏற்கனவே 2016ம் ஆண்டு, இரஷ்யாவின் மாஸ்கோ நகரில், பிரபலக் கலைஞர்களின் படைப்புக்களுடன், கலைக் கண்காட்சி நடத்தப்பட்டு, வெற்றியடைந்துள்ளதைத் தொடர்ந்து, தற்போது, வத்திக்கானில், இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Source: New feed