மைக் பொம்பியோ நேற்று இரவு இலங்கைக்கு வருகைத் தந்திருந்த நிலையில், இன்று (புதன்கிழமை) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் செய்தியாளர் மாநாட்டிலும் கலந்துகொண்ட அவர், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கும் விஜயம் செய்தார். இலங்கைக்கு 2நாள் விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் பொம்பியோ புதன் கிழமை 28.10.2020 கொச்சிகடை புனித அந்தோனியார் ஆலயத்துக்கும் விஜயம் செய்து பார்வை இட்டுள்ளார். கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பாக பார்வை இட்டதுடன், ஆலயத்தில் இறந்த இறைமக்களின் நினைவு சின்னத்திற்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 1.06 மணியளவில் விசேட விமானத்தின் ஊடாக மாலைத்தீவை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார் இந் நிகழ்வில் குருக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.
Source: New feed