உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தைப் பெற்றுக்கொள்ளவிருக்கும் 92 மாணவர்களிற்கான பாசறை இன்றையதினம் மாரீசன்கூடல் புனித கைத்தார் ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை சா. ஜஸ்ரின் அடிகளாரின் வழிகாட்டுதலில் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை போல் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
பாசறை நிகழ்வுகளை எம் பங்கின் மறையாசிரியர்கள் ஒழுங்கமைத்து நிகழ்த்தினர்.
தூய ஆவியானவர் பற்றிய கருத்துரையை மாரீசன்கூடல் பங்குத்தந்தை அருட்தந்தை டினேஷன் அடிகளார் வழங்கினார்.
மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளை யாழ். திருமறைக் கலாமன்ற உறுப்பினர் திரு. சதீஸ் அவர்களும் மறையாசிரியர் திரு. மது நிகழ்த்தினர்.
இறுதியில் போட்டியில் வெற்றிபெற்ற குழுவினர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
Source: New feed