மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களால் கன்னாட்டி பரிட்சாத்தப்பங்கின் வடகாடு புனித அந்தோனியார் புதிய ஆலயம் திறந்துவைக்கப்பட்டு, திருப்பலியில் அர்ச்சிக்கப்பட்டது. வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி. இராஐநாயகம் அடிகளார், முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி. சுரேந்திரன் றெவ்வல் அடிகளார் மேலும் பல அருட்பணியாளர்கள் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். பங்குத்தந்தை அருட்பணி. அன்ரனி சோசை அடிகளார் வளர்ந்துவரும் பங்காகிய கன்னாட்டியைச் சேர்ந்த அனைத்து ஆலயங்கள் மீதும் இறைமக்கள் மீதும் அவர் காட்டிவரும் கரிசனையை நினைத்து மறைமாவட்டம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.
Source: New feed