29வது உலக நோயாளர் நாளுக்கு வெளியிட்டுள்ள செய்தியை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 12, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்திகளையும் வெளியிட்டுள்ளார்.
“ஒரு சமுதாயம், தன்னில் மிகவும் வலுவிழந்த மற்றும், துன்புறும் மக்களுக்கு, உடன்பிறந்த அன்புணர்வில் அக்கறை காட்டி பராமரிக்கும்போது, அந்த சமுதாயம் அதிக மனிதாபிமானம் கொண்டதாய் உள்ளது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், இச்செவ்வாயன்று முதல் செய்தியாக இடம்பெற்றிருந்தன.
இச்செவ்வாயன்று, திருத்தந்தை வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “நாம் கொண்டிருக்கும் மிகப்பெரும் செல்வம், நாம் யார் என்பதைப் பொருத்தே அமைந்துள்ளது. அதாவது, நாம் பெற்றுள்ள வாழ்வு, நமக்குள்ளே இருக்கின்ற நன்மைத்தனம், கடவுள் தம் சாயலில் நம்மைப் படைத்து, நமக்கு அவர் அளித்துள்ள அழியாத அழகு ஆகியவற்றை பொருத்தது. இவையனைத்தும் நம் ஒவ்வொருவரையும், கடவுளின் கண்களில் விலைமதிப்பற்றவர்களாக, வரலாற்றில் நாம் ஒவ்வொருவரும், விலைமதிப்பற்றவர்கள் மற்றும், தனித்துமிக்கவர்களாக ஆக்குகின்றன” என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.
திருத்தந்தையின் உலக நோயாளர் நாள் செய்தியை இணையதளத்தில் வாசிப்பதற்கு உதவியாக, டுவிட்டர் செய்திகளோடு, இணையதள முகவரிகளும் தரப்பட்டுள்ளன.
Source: New feed