பெருந்தன்மை, ஒற்றுமை, சமத்துவம் போன்றவற்றிலிருந்து வரும் சமுக வாழ்வின் நன்மைகள் அதன் சிறப்பு அர்த்தங்களைப் பெற ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் சிங்கப்பூர் மாநாட்டில் கேட்டுக்கொண்டார்.
செப்டம்பர் 6 முதல் 8 வரை சிங்கப்பூர் Raffles மையத்தில் நடைபெற்ற அனைத்துலக சமூக கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்று, ஒற்றுமையின் கூடாரம் புனித திருப்பயணம் என்ற கருத்தில் பேசிய போது இவ்வாறு கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், பன்முகத்தன்மை, பொறுப்புணர்வு, உடன்பிறந்த உறவில் கட்டி எழுப்பப்படும் சமூகம், சிறந்த சமூக ஒற்றுமைக்கான நீதி போன்றவற்றையும் வலியுறுத்திப் பேசினார்.
சமூகங்களால் இணைக்கப்பட்ட நம்பிக்கையின் அடையாளங்கள் என்னும் தலைப்பின் கீழ், பல்வேறு மதத் தலைவர்கள், கல்வியாளார்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் என 40 நாடுகளிலிருந்து 800 பேர் கலந்துகொண்ட இம்மாநாட்டில் பங்கேற்ற கர்தினால் பரோலின் அவர்கள், சமூக விதிமுறைகள் காட்டும் பொதுவான வழிகள், தனிநபர் அல்லது பொது மக்கள் தங்கள் குறிக்கோளை எளிதாகவும் நிறைவாகவும் அடைய வழிகாட்டுகின்றன என்றும் எடுத்துரைத்து ஒற்றுமை என்பதற்கு 6 வகையான செயல்விளக்கமும் அளித்தார்.
Source: New feed