உலக கருணை தினம் நவம்பர் 13 ஆம் திகதி அனுஷ்ட்டிக்கப்படுகின்றது.
பல ஆண்டுகளாக உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் இந்ந தினம் கொண்டாடப்படுகிறது.
லூயிஸ் பர்பிட்-டன்ஸ் மற்றும் டேவிட் ஜாமிலி என்ற இரண்டு மனித நேய உறுப்பினர்கள் கருணை இயக்கத்தை ஆரம்பித்தனர்.
அவர்களுடைய நோக்கம் உலகம் முழுவதும் நல்ல செயல்களை முன்னிலைப்படுத்துவதே ஆகும்.
கருணையின் மூலம் உலகையே மாற்றியமைக்க முடியும் என்பது நாம் அறிந்த உண்மை.
பணத்தினால் மதீப்பீடு செய்ய முடியாத ஒரு விடயமே கருணை எனவே ஒருவர் மீது மற்றுமொருவர் கருணையுடன் நடந்துகொள்வதன் ஊடாக தன்னலமற்ற, கருணை நிறைந்த மனிதர்கள், வாழும் ஒரு சிறந்த இடமாக இவ் உலகை மாற்ற முடியும்.
நம் அனைவரிடமும் கருணை என்ற ஒரு உன்னதமான குணம் உள்ளது, அந்த குணம் சில சமயங்களில் நம்மில் பலரினுள் உறங்கிய நிலையிலேயே உள்ளது.
உறங்கிய நிலையிலுள்ள கருணை குணத்தை துயில் எழச்செய்தல் நம் கடமையல்லவா? நம்முடைய சிறு புன்னகை கூட அதற்கான ஒரு முயற்சியே!
முயற்சித்துப் பாருங்கள் கருணை நிறைந்த உலகை உருவாக்குவோம்
Source: New feed