மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து
இறைவனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்பணித்த அருட்தந்தையர்கள், அருட்கன்னியர்கள் தங்கள் பணிவாழ்வின் பொருட்டு இலகுவாக இந்த கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடுகிறது. நோயின் நிமித்தம் சிகிச்சை பெறும் ஒவ்வொரு குருக்களையும், கன்னியர்களையும் ஆண்டவரது வல்லமை மிக்க அருட் கரங்கள் தொட்டு குணமாக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
பேதுருவின் மாமியார் காய்ச்சலால் படுத்திருப்பதைக் கண்ட இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கியதை நாம் அறிவோம். இப்பொழுது இல்லங்களில் காய்ச்சல் அறிகுறியுள்ளவர்கள் அனைவரும் இந்த நோயினால் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பேதுருவின் மாமியாரை குணமாக்கியது போல இவர்களையும் இயேசு தம் கரங்களால் தொட்டு குணமாக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
“ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.”
என்ற நூற்றுவத் தலைவனின் அசைக்க முடியாத நம்பிக்கையை நாம் ஒவ்வொரும் பெற்றிட இந்த
மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
நோய்த் தொற்றின் நிமித்தம் உலகம் முழுவதும் சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளும் பரிபூரண சுகம் பெற்றிட நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
இன்றைய நாள்களில் வருமானம் இல்லாமல் ஏழ்மையில் தவிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் இறைவன் நல்லதொரு வழியைக் காட்டிட ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Source: New feed