மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
“உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார்.” என புனித பவுல் இன்றைய திருப்பலி இரண்டாம் வாசகத்தில் கூறுகிறார். உலகம் தோன்றுவதற்கு முன்னரே நம்மைத் தேர்ந்தெடுத்த இறைவனின் இறைத்திட்டத்திற்கு நாம் உகந்த கருவிகளாக இருக்கின்றோமா? என நாம் ஆழ்ந்து சிந்திக்க இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
கன்னி மரியாளின் அமலோற்பவ பெருவிழாவைக் கொண்டாடும் இன்று, உலக மீட்புத் திட்டத்திற்கு காரணமான நம் அன்னை மரியாளை நமக்குத் தந்தருளிய இறைவனுக்கு நன்றியாக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். இறைவனின் விருப்பத்திற்கு, இறைத்திட்டத்திற்கு மரியா தன்னையே கையளித்தது போல நாமும் இறைசித்தத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக மாற இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
நாற்பது நாள்கள் கல்லறையில் இருந்த ஒருவரை உயிருடன் எழுப்பி அற்புதம் புரிந்த ஆயரும் இன்றைய புனிதருமான யூச்சரியஸை திருச்சபைக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
நமது உள்ளத்திலும், இல்லத்திலும் பிறக்க இருக்கும் இயேசு பாலனை வரவேற்க இந்த திருவருகைக் காலத்தில் நம்மையே நாம் முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ள இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.!
Source: New feed