பிரமாண்டமான அரங்கில்,இருநூறுக்கும் அதிகமான கலைஞர்களின் பங்கேற்பில் திருமறைக் கலாமன்றம் தயாரித்தளிக்கும் ‘அன்பில் மலர்ந்த அமரகாவியம்’ திருப்பாடுகளின் நாடகம் இன்று 11 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகின்றது.தொடர்ந்து 14ஆம் திகதிவரை நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த நாடகம் இன்றும்,சனி,ஞாயிறு தினங்களிலும் மாலை6.45 மணிக்கும் வெள்ளிக்கிழமை மாலை 7 30 மணிக்கும் ஆரம்பமாகும்.
இலங்கையிலேயே இடம்பெறுகின்ற மிகப்பெரிய அரங்க நிகழ்வு என்று கருதக்கூடிய இப்படைப்பை பார்வையிட இம்முறையும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Source: New feed