குருத்துவம் பெறாத ஃபிரான்சிஸ்கன் அருட்சகோதரர்:
(Franciscan Lay Brother)
பிறப்பு: டிசம்பர் 1520
செயின்ட் கொலோமா டி ஃபார்நெர்ஸ், கிரோனா, ஸ்பெயின்
(Santa Coloma de Farners, Girona, Spain)
இறப்பு: மார்ச் 18, 1567
ககிலியாரி, ஸர்டினியா, ஸ்பேனிஷ் பேரரசு
(Cagliari, Sardinia, Spanish Empire)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(இளம் துறவியர் சபை)
(Roman Catholic Church)
(Order of Friars Minor)
முக்திபேறு பட்டம்: ஃபெப்ரவரி 5, 1606
திருத்தந்தை ஐந்தாம் பால்
(Pope Paul V)
புனிதர் பட்டம்: ஏப்ரல் 17, 1938
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)
முக்கிய திருத்தலங்கள்:
புனித ரோசலி தேவாலயம், கக்ளியரி, ஸர்டினியா, இத்தாலி
(Church of St. Rosalie, Cagliari, Sardinia, Italy)
நினைவுத் திருநாள்: மார்ச் 20
புனிதர் சல்வேடர், ஸ்பெயின் நாட்டின் “கேடலோனியா” (Catalonia) பிராந்தியத்தைச் சேர்ந்தவரும், ஃபிரான்சிஸ்கன் சபையின் குருத்துவம் பெறாத மறை பணியாளரும் (Franciscan Lay Brother) ஆவார். தமது வாழ்நாள் காலத்தில் இவர் அதிசயங்கள் பல செய்ததாக மக்கள் இவரைக் கொண்டாடுகின்றனர்.
“சல்வேடர் ப்ளடேவல் ஐ பீன்” (Salvador Pladevall i Bien) எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஒரு ஏழைக் கூலித்தொழிலாளர்களின் மகனாவார். ஸ்பெயின் நாட்டின் “கிரோனா” (Province of Girona) மாகாணத்தின், சான்ட கொலோனா டி ஃபார்னர்ஸ்” (Santa Coloma de Farners) எனும் பெயர் கொண்ட மருத்துவமனையில் பிறந்த இவரது பெற்றோர் இருவரும் இம்மருத்துவமனையின் பணியாளர்களாவர். தமது பதினான்கு வயதிலேயே அனாதையான இவர், தமது ஒரே தங்கையான “ப்ளாஸா’வை” (Blasa) அழைத்துக்கொண்டு “பார்சிலோனா” (Barcelona) சென்றார். தங்கள் இருவரது வயிற்றுப்பிழைப்புக்காக செருப்புத் தைக்கும் பணி செய்தார். தமது தங்கைக்கு திருமணமானதும் தாம் இறை சேவையில் ஈடுபட எண்ணியிருந்தார்.
அவரது எண்ணம் போலவே தங்கைக்கு திருமணம் ஆனது. சல்வேடர் முதலில் பார்சிலோனாவுக்கு அருகேயுள்ள “புனித மரியாளின் பெனடிக்டைன்” (Benedictine Abbey of Santa Maria de Montserrat) துறவு மடத்தில் சேர்ந்தார். மென்மேலும் தாழ்ச்சியுடன் வாழ்வினை அர்ப்பணிக்க விரும்பிய சல்வேடர், “பெனடிக்டைன் துறவு மடத்திலிருந்து” விலகி, பார்சிலோனாவிலுள்ள “இளம் துறவியர் சபையின்” (Order of Friars Minor) “துறவறப்புகுநிலையின் கண்காணிப்புக் கிளையில் (novitiate of the Observant branch) கி.பி. 1541ம் ஆண்டு, மே மாதம், 3ம் நாளன்று, “குருத்துவம் பெறாத அருட்சகோதரராக” (Lay Brother) இணைந்தார். அவர் கி.பி. 1542ல் தமது உறுதிப்பாடுகளை ஏற்றுக்கொண்டார். அங்கேதான் அவரது பணிவான துறவு வாழ்க்கை முறை அனைவருக்கும் தெரிய வந்தது.
பின்னர் அவர் “டோர்டோஸா” (Tortosa) என்னுமிடத்திலுள்ள துறவு மடத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கே அவருக்கு சமையல் பணிகள், சுமை சுமக்கும் பணி, ‘யாசகம் வாங்கும் பணி’ ஆகியன வழங்கப்பட்டன. விரைவிலேயே சல்வேடர் நோயுற்றோரின் நோய்களை நீக்கும் அதிசயங்களைச் செய்ய ஆரம்பித்தார். அவர் பணி புரிந்த துறவு மடம் நோயாளிகளால் நிரம்பிப் போனது. வெகு தூர இடங்களிலிருந்தெல்லாம் நோயுற்றோர் வர ஆரம்பித்தனர். வாரம் தோறும் சுமார் இரண்டாயிரம் பேர் வரை வந்து சென்றதாக கூறப்படுகிறது.
துறவு மடத்தின் தலைமைத் துறவியர் அவர் மீது அவநம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனர். அவரை வெவ்வேறு துறவு மடங்களுக்கு அனுப்பினர். இறுதியில் அவர் “ரியுஸ்” (Reus) மற்றும் “மேட்ரிட்” (Madrid) ஆகிய இடங்களிலுள்ள துறவு மடங்களுக்கு சென்றார். அங்கே, ஸ்பெயின் நாட்டின் மன்னர் “இரண்டாம் பிலிப்” (King Philip II of Spain) அவரை காணச் சென்றார். கி.பி. 1560ம் ஆண்டு, அவர் செய்திருந்த அற்புதங்களுக்காக ஸ்பேனிஷ் அரசு விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், அவர் உண்மையாகவே அதிசயங்கள் செய்வதாக முடிவுக்கு வந்தனர்.
கி.பி. 1565ம் ஆண்டு, சல்வேடர் “சார்டினியா” (Sardinia) தீவின் “கக்ளியாரி” (Cagliari) எனும் இடத்திலுள்ள “இயேசுவின் புனித மரியாள்” (Friary of St. Mary of Jesus) துறவு மடத்திற்கு சென்றார். அங்கே ஸ்பெயின் சட்டப்படி துறவு சமூகத்தினருக்கு சமையல் பணி செய்தார். தமது செப பரிந்துரையால் நோய் நீக்கும் அற்புதங்களையும் செய்து வந்தார்.
தம்மிடம் நோய் நீங்க வரும் நோயாளிகளிடம், அவர்களது உளச்சான்றினை பரிசோதிப்பதற்காக, பாவ மன்னிப்பு பெறவும், நற்கருணை பெற்று வரவும் வலியுறுத்தினார். இவற்றை செய்ய மறுத்தவர்களுக்காக அவர் செபிக்க மறுத்தார்.
Source: New feed