இந்து சமுத்திரத்தின் முத்தாக காணப்பட்ட நமது நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானபிரகாசம் அவர்கள் தற்கால பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
74 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டவர்கள் மக்களை நாட்டு பிரஜைகளாக கருதாமல் தம்முடைய வாக்குகளுக்காக பாவித்து நாட்டிலிருந்த வளத்தை எல்லாம் சுரண்டி பிச்சை எடுக்கும் நாடாக இந்நாட்டை மாற்றி பாரிய நெருக்கடிக்குள் மக்களை தள்ளிவிட்டார்கள் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: New feed