இந்த புகைபடத்தை பார்க்கும் போது மதவாதிகளுக்கு கோபம் வரத்தான் செய்யும்.வரட்டும்.கடவுளுக்கு தேவை மனமாற்றமே தவிர மதமாற்றம் இல்லை.
இந்து | கத்தோலிக்கம் | இஸ்லாம் | என்பது மதமே தவிர இனம் அல்ல என்பதற்க்கு இந்த புகைப்படம் அழகான எடுத்துக்காட்டு.இதை புரிந்து கொண்டு ஒற்றுமைபடு தமிழா
கத்தோலிக்கம் எனது மதம் அன்னை தமிழ் எனது இனம்
இப்படி ஒவ்வோருவருக்கும் ஒவ்வோரு மதம் இருக்கும். ஆனால் நாங்கள் எல்லோரும் முதலில் தமிழர்கள் என்பதை புரிந்து கொள் தமிழா.
உலகில் உள்ள எல்லா இனத்திலும் வேறு வேறு மதங்கள் இருக்கும். ஆனால் அவர்கள் ஒருபோதும் மதத்தின் வழி | சாதி வழி பிரிந்து நிற்பதில்லை என்பதை நினைவில் கொள் தமிழா.
ஒரு கல்லை எடுத்து நாயைப்பார்த்து வீசினால் அது பயந்து ஓடிவிடும்.அதே கல்லால் ஒரு தேன் கூட்டை நோக்கி வீசினால் தேனீக்களுக்கு பயந்து நாம் ஓட வேண்டும்.பலம் வாய்ந்த நாயை விட பலம் குன்றிய தேனீக்கள் எங்களை ஓட வைப்பதற்கு காரணம் தேனீக்கள் ஒற்றுமையாக நம்மை துரத்துவதால்தான்.எந்த இனமாக இருந்தாலும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்.என்பதை புரிந்து கொண்டு உடனே விழி தமிழா.
Source: New feed