ஆயித்திய மலை சதா சகாய அன்னை ஆலய திருவிழாவை முனனிட்டு வருடா வருடம் இடம்பெற்று வரும் பாத யாத்திரையானது (சனி) அன்று காலை 5.15 மணியளவில் திருப்பலியின் பின்னர் ஆரம்பமானது. மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வுச் சமூகத்தினரால் மட்டக்களப்பு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் ஒழுங்குபடுத்தப்பட்ட இப்பாத யாத்திரையை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு. ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன் ஆயர் அவர்களும் இப்பாத யாத்திரையில் முழுமையாக கலந்து கொண்டிருந்தார் மேலும் இப்பாத யாத்திரையில் கிறிஸ்த்தவர்கள்
மட்டுமன்றி பிற மதத்தவர்களுமாக கலந்து கொண்டு சதா சகாய அன்னையின் அருள் வேண்டி வழிபட்டனர்.
இன்று ஞாயிறு திருவிழாத் திருப்பலியானது மட்டக்களப்பு
மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு. ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களின் தலைமையில் இடப்பெற்றது.
Source: New feed