யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமரர் ஆயர் வ.தியோகுப்பிள்ளை ஆண்டகையின் பத்தாவது அறக்கொடைப் பேருரை 13.12.2018 வியாக்கிழமை மாலை 4.00 மணிக்கு பாதுகாவலன் கேட்போர் கூடத்தில் குருக்கள் ஒன்றியத்தின் தலைவர் அருட்திரு ம. டேவிட் அடிகளாரின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘வெற்றி மீதான மனப்பாங்கின் வகிபாகம்’ என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிகபீட பீடாதிபதி பேராசிரியர் தி. வேல் நம்பி. Ph.D. அவர்கள் பேருரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானம்பிரகாசம் ஆண்டகை பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தர். நூற்றுக்கும் அதிகமான குருக்கள், துறவிகள் மற்றும் மக்கள்ளென இதில் இணைந்து பயனடைந்தனர்
Source: New feed