அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 3ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அருட்சாதன திருப்பலியில் கொக்கிளாய் முகத்துவாரத்தை சேர்ந்த 30 சிங்கள மொழி பிள்ளைகளுக்கும் அளம்பிலை சேர்ந்த 80 பிள்ளைகளுக்கும் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கப்பட்டது.
பங்குத்தந்தை அருட்திரு யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப் பங்குத்தந்தை அருட்திரு எரோனியஸ் மற்றும் மறையாசிரியர்களின் உதவியுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.
Source: New feed