அருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் யாழ்பாணத்தில் பிறந்து தனது ஆரம்ப கல்வியை கொழும்பு கொட்டாஞ்சேனை தூய ஆசிர்வாதப்பர் கல்லூரியில் தொடக்கி, பின் யாழ் தூய பத்திரிசியார் கல்லூரியில் தனது படிப்புகளை முடித்து விட்டு, அதன் பின் யாழ் தூய பிரான்சிஸ் சவேரியார் குருமடத்தில் இணைந்து முதல் மூன்று வருட மெய்யியல் படிப்புகளை முடித்து விட்டு, அதன் பின் யாழ் பல்கலைகழகம் சென்று நான்கு வருடங்கள் கணிதத்துறையில் படித்து பட்டம் பெற்று விட்டு[Bachelor’s Degree in Mathematics ]மீண்டும் கண்டி குருமடத்தில் சென்று தனது நான்கு வருட இறையியல் படிப்புகளை முடித்து விட்டு 2000ம் ஆண்டு அதிஉயர் ஆயர் நிக்கலஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ அவர்களால் கொழும்பு உயர் மறைமாவட்டக் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
குருப்பட்டம் பெற்ற பின் அவர் இங்கிலாந்து நாடு சென்று University of Middlesex யில் படித்து [Masters in Education ], பின் யாழ் பல்கலை கழகம் சென்று அங்கு படித்து பட்டம் [Masters in Philosophy]எடுத்தவராவார்.
பின் கொழும்பு தூய இராயப்பர், தூய செபஸ்தியார், மற்றும் தூய சூசையப்பர் கல்லூரிகளில் ஆசிரியாராக பணியாற்றினார்,
அதன் பின் தூய இராயப்பர், தூய சூசையப்பர் கல்லூரிகளில் உதவி அதிபராக பணியாற்றி விட்டு, சென்ற வருடம் தூய செபஸ்தியார் கல்லூரியில் அதிபராக நியமிக்கப்பட்டு, இன்று வரை அக்கல்லூரியின் அதிபராக கடமையாற்றிக்கொண்டிருக்கிறார்,
அது மட்டுமில்லாமல் கொழும்பு இறையியல் கல்லூரி தமிழ் பிரிவுக்கும் இவர் பொறுப்பாக இருகின்றார்.
அவரை தனக்கென தெரிந்தெடுத்து, தனது குருவாக அர்ச்சித்த இறைவன், அவரை மென்மேலும் ஆசிர்வதித்து, தனகேற்றவாறு, பணியாற்ற, அவருக்கு உறுதுணையாக இருப்பாராக.
Source: New feed