அயலவருக்கு, முழுமனதுடன் பணிபுரிந்து, மன்னிக்கும் பண்பில் வளருமாறு, நம் அனைவரையும், தன் டுவிட்டர் செய்தி வழியாக கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளை அன்புகூர்வது பற்றி, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளை அன்புகூர்வது என்பது, முழுமனதுடன் நம் அயலவருக்குச் சேவை செய்வதாகும் மற்றும், வரையறையின்றி மன்னிக்க முயற்சிப்பதுமாகும் என்று விளக்கியுள்ளார்.
மேலும், ஜெனீவாவிலுள்ள, உலகளாவிய கத்தோலிக்க சிறார் அமைப்பின் தலைவர் Olivier Duval அவர்கள், தன் பிரதிநிதிகள் குழுவுடன், இவ்வெள்ளி காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
BICE எனப்படும், உலகளாவிய கத்தோலிக்க பாலர் சபை அமைப்பு, சிறாரின் உரிமைகளும் மாண்பும் பாதுகாக்கப்பட்டு, ஊக்குவிக்கப்படுவதற்காக, 1948ம் ஆண்டில், உருவாக்கப்பட்டது. ஜெனீவாவில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் இந்த அரசு-சாரா ப்ரெஞ் அமைப்பு, தற்போது நான்கு கண்டங்களில், 66 நாடுகளில் பணியாற்றி வருகின்றது
Source: New feed