அனைத்தையும் புதிதாக்கும் வல்லமை, இறைவனின் அன்பிடம் மட்டுமே உள்ளது என இத்திங்களன்று தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
‘கடவுளின் அன்பு எனும் ஒரே வல்லமையால் மட்டுமே, அனைத்தையும் புதியனவாக மாற்ற முடியும்’ என திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி உரைக்கின்றது.
மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘ஒவ்வொரு பாலியல் அத்துமீறல் நடவடிக்கையும் ஒரு பெரும் கொடுஞ்செயல் ஆகும். மக்களின் நியாயமான கோபத்தில், இறைவனின் கடுங்கோபத்தின் பிரதிபலிப்பை திருஅவை காண்கிறது. சப்தமில்லாத இந்த மௌன அழுகுரலுக்கு அக்கறையுடன் செவிமடுக்க வேண்டியது நம் கடமை’ என எழுதியுள்ளார்.
திருத்தந்தையின் ஞாயிறு தின டுவிட்டர் செய்தி, கடந்த வார இறுதியில் வத்திக்கானில் இடம்பெற்ற, சிறார் பாலியல் முறைகேடுகள் குறித்த கூட்டத்தை ஒட்டியதாக இருந்தது.
Source: New feed